மொட்டை அடித்து வேண்டிக்கொண்ட முதலமைச்சர் மனைவி - திருப்பதியில் சாமி தரிசனம்!

Telangana
By Sumathi Oct 10, 2023 05:48 AM GMT
Report

முதலமைச்சரின் மனைவி திருப்பதி கோவிலில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார்.

தேர்தல் களம்

தெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும்,

மொட்டை அடித்து வேண்டிக்கொண்ட முதலமைச்சர் மனைவி - திருப்பதியில் சாமி தரிசனம்! | Telangana Chief Minister Wife Visit Tirupati

டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மனைவி சோபா குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார்.

முதல்வர் மனைவி வேண்டுதல்

அங்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்தி எழுமலையானை வழிபட்டார். அவருக்கு திருப்பதி மலையில் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.  

மொட்டை அடித்து வேண்டிக்கொண்ட முதலமைச்சர் மனைவி - திருப்பதியில் சாமி தரிசனம்! | Telangana Chief Minister Wife Visit Tirupati

தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்- பிரதமர் மோடி பேச்சு!

தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்- பிரதமர் மோடி பேச்சு!