தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்- பிரதமர் மோடி பேச்சு!
தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பாஜக அரசை விரும்புகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பிரதமர் மோடி
தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சாலை, ரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில், ரூ.13.500 கோடி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு தெலுங்கானாவில் அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரயில் போக்குவரத்து சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து மெகபூப்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பேச்சு
அப்போது பேசிய அவர் "தெலங்கானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பாஜக அரசை விரும்புகிறார்கள். தெலங்கானா மக்கள் ஊழல் நிறைந்த அரசை விரும்பவில்லை.
வெளிப்படையானநேர்மையான அரசை மக்கள் விரும்புகிறார்கள். தெலங்கானா மக்களின் வாழ்கையை மேம்படுத்த பாஜக உறுதி பூண்டுள்ளது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் ஆதினியம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்மூலம், வரும் காலங்களில் நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்" என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் தேர்தலைச் சந்திக்க உள்ள தெலங்கானா மாநிலத்திற்கு பிரதமரின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது