வரலாறு காணாத மழை; ஒலிக்கும் மரண ஓலம் - அடுத்து தாக்கப்போகும் புயல்!
அஸ்னா புயல் ஆந்திரா அருகே கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மூழ்கியுள்ளது.
இதில் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31 பேர் பலி
தொடர்ந்து ஆந்திரா, தெலுங்கானாவில் செப்டம்பர் 6-ந் தேதி வரை 438 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில் வங்கக் கடலில் உருவான ஆஸ்னா புயல் நாளை மறுநாள் ஆந்திரா அருகே கரையைக் கடக்கும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலோரப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த கனமழை வெள்ளத்தால் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போன சிலரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.