திருப்பதிக்கு போறீங்களா? அமலுக்கு வந்த புதிய நடைமுறை - கவனிச்சிக்கோங்க..
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கள்ளச் சந்தையில் லட்டு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, இதனை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தேவஸ்தானம் அறிவிப்பு
அதன்படி, கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுன்டர்களில் ஒரு லட்டுக்கு 50 ரூபாய் செலுத்தி பெற்று வந்தனர். தற்போது, இதுகுறித்து பேசியுள்ள தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ்,
சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு, தலா 50 ரூபாய் விலையில், அன்லிமிடெட் லட்டுகள் வழங்கப்படும். சாமி கும்பிடாமல் திருப்பதி மலையில் இருந்து ஒரு சிலர் ஏராளமான லட்டுக்களை வாங்கி சென்று,
அவற்றை தங்கள் வீட்டு திருமணங்களில் உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்.
பிரசாதமாக வழங்கப்படும் லட்டை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.