18 ரயில்கள் ரத்து; புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு - தவிக்கும் மக்கள்
18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு
ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெஹபூபாபாத், நல்கொண்டா, வாரங்கல், ஆந்திராவில் என் டி ஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மூழ்கியுள்ளது.
இதில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் மேலும் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, தண்ணீர சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 ரயில்கள் ரத்து
இந்நிலையில், விஜயவாடா - காசிபேட் இடையே தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் 18 ரயில்கள் ரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரலிலிருந்து நேற்று புறப்படுவதாக இருந்த ஜெய்பூா் விரைவு ரயில், ஜிடி விரைவு ரயில், தமிழ்நாடு விரைவு ரயில்.
தில்லி துரந்தோ விரைவு ரயில், அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், பிலாஸ்பூா் விரைவு ரயில். திருநெல்வேலி-பிலாஸ்பூா் விரைவு ரயில், திருவனந்தபுரம்-புதுதில்லி கேரளா விரைவு ரயில், மதுரை-சண்டிகா் விரைவு ரயில் உள்ளிட்டவை கூடூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல் வழியாக செல்வதற்கு பதிலாக ரேணிகுண்டா, காசிபேட், குண்டக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும்.
கொச்சுவேலி-கோரக்பூா் விரைவு ரயில், ராமேசுவரம்-அயோத்தியா விரைவு ரயில் சென்னை வராமல் ரேணுகுண்டா வழியாக இயக்கப்படும்.
விஜயவாடாவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அதிகளவில் மழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.