கோர வெள்ளப்பெருக்கு; தவிக்கும் மக்கள் - 2 லட்சம் பேர் வெளியேற்றம்!

Somalia
By Sumathi May 15, 2023 05:19 AM GMT
Report

வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

சோமாலியா கடுமையான வறட்சி பாதிப்பை கண்டுவந்த நிலையில், தற்போது கடுமையாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஷாபெலே மற்றும் ஜூபா ஆகிய நதிகள் கரைகளை உடைத்து வெள்ள பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்துள்ளது.

கோர வெள்ளப்பெருக்கு; தவிக்கும் மக்கள் - 2 லட்சம் பேர் வெளியேற்றம்! | Flooding In Somalia Displaces 200000 People

இந்த திடீர் வெள்ள பெருக்கு காரணமாக 2 லட்சம் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். மேலும், பல கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மக்கள் தவிப்பு

சுமார் 1000 ஹெக்டேர் விளைநிலம் நீரில் மூழ்கின. அதீத பருவநிலை மாற்றம் பிரச்சனையே, பேரிடர்களுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கோர வெள்ளப்பெருக்கு; தவிக்கும் மக்கள் - 2 லட்சம் பேர் வெளியேற்றம்! | Flooding In Somalia Displaces 200000 People

முன்னதாக 2020க்குப் பின் மட்டும் பேரிடர் காரணமாக சுமார் 14 லட்சம் சோமாலியர்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 38 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.