காங்கோவில் திடீர் வெள்ளப்பெருக்கு - 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஆப்ரிக்கா நாடான காங்கோவில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனுள்ளனர்.
காங்கோ
ஆப்ரிக்கா நாட்டின், கிழக்கு காங்கோவில் உள்ள தெற்கு கவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவது மலை பெய்துள்ளது.
இதனால் அங்கு உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின, வெள்ளத்தில் புஷுஷு மற்றும் நியாமுகுபி எனும் கிராமங்கள் மூழ்கியுள்ளது. அதனால் அந்த பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்.
உடல்களை மீட்கும் பணி
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அத்துடன், மருத்துவமனைகளில் இருந்த மருந்துகள், பொருட்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன.
தொடர்ந்து, இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தற்போது சுமார் 227 பேரின் உடல்கள் மீட்கப்பட்டள்ளதாக கூறப்பட்டுகிறது.