குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

By Thahir Dec 03, 2022 05:10 AM GMT
Report

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவியில் குவிக்க வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த 30ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திருலும் தண்ணீர் வரத்து கடந்த 1-ம் தேதி சீரானது. இதனால் அனைத்து அருவிகளும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

flooding-in-kutralam-falls-

இந்த சூழலில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றம் 

இந்நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி மற்றும் பழைய மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.