பெண்களுக்கு ரூ.30,000 - "இந்தியா" கூட்டணி கையிலெடுத்த பிரம்மாஸ்திரம்!
தேஜஸ்வி யாதவ் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
பீகார்
பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து நவம்பர் 11ம் தேதி மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு உறுதியளிக்கப்பட்ட உதவித்தொகை
அடுத்த ஆண்டு ஜனவரியில் ஒரே தவணையாக ரூ.30,000ஆக என்று அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். அங்கு ஆளும் என்டிஏ கூட்டணி முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது.
தேஜஸ்வி அறிவிப்பு
அத்திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்குச் சொந்தத் தொழில் தொடங்க ரூ. 10,000 வழங்கப்படும் என முன்னதாக அறிவித்தது. இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த தேஜஸ்வி, "மகர சங்கராந்தி அன்று (ஜனவரி 14) மை பஹின் மான் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒரே தவணையாக ரூ.30,000 வழங்கப்படும்.

நான் பல இடங்களுக்குச் சென்று பெண்களுடன் கலந்துரையாடினேன். பீகாரில் உள்ள அனைத்துத் தாய்மார்களும் சகோதரிகளும் 'மை பஹின் மான் யோஜனா' திட்டத்தை வரவேற்கிறார்கள். இந்தத் திட்டம் அவர்களுக்கு நிச்சயம் பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்கும். குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் கூடுதலாக விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.300,
ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 400 போனஸாக வழங்கப்படும். ஆசிரியர்கள், போலீசார், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டத்திலிருந்து 70 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பணி இடமாற்றமும், பணி நியமனமும் உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.