நெரிசலில் சிக்கி 12 பேர் பலி - சாமி கும்பிட போன இடத்தில் துயரம்!
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கூட்ட நெரிசல்
ஆந்திரா, காசிபுக்கா நகரில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தினசரி கோயிலுக்கு 3 ஆயிரம் பக்தர்கள் வரும் நிலையில்

தெலுங்கு கார்த்திகை ஏகாதசியை ஒட்டி வழக்கத்தை விட 8 மடங்கு பக்தர்கள் கோயிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இங்கு ஒரே நேரத்தில் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
12 பேர் பலி
மேலும், கூட்டத்தை கையாளும் அளவுக்கு கோயிலில் போதிய வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதில் சிக்கி குழந்தை, பெண்கள் என 12 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையை வேண்டுவதாக கூறிய அவர், அவர்களுக்கு பிரதமரின் தேசிய பொது நிவாரண நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.