குப்பை தொட்டியில் எடுத்த பேப்பர்; ரூ.2.5 கோடிக்கு அதிபதி - ஆனால்..
வீட்டைச் சுத்தம் செய்த இளைஞருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
சிக்கிய பத்திரம்
குஜராத், உனாவில் உள்ள தனது தாத்தா சவ்ஜி படேலின் மறைவுக்குப் பிறகு, அவர் தங்கியிருந்த வீட்டைச் சுத்தம் செய்யப் பேரன் சென்றிருக்கிறார். அப்போது குப்பையில் சில ஆவணங்களை பார்த்துள்ளார்.

கூடவே சில சான்றிதழ்களும் இருந்த நிலையில், அதை எடுத்துப் பார்த்துள்ளார். அதனை ஆராய்ந்ததில், அது சில நிறுவனத்தின் பங்குகளின் சான்றிதழ்கள் என்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ. 2.5 கோடி. மறைந்த தாத்தா சவ்ஜி படேல் டையூவில் உள்ள ஒரு ஹோட்டலில் சர்வாராக பணிபுரிந்தார்.
அந்த ஹோட்டல் கட்டப்படுவதற்கு முன்பு, அதன் உரிமையாளருக்குச் சொந்தமான ஒரு பங்களாவில் வீட்டுப் பராமரிப்பாளராக இருந்தார். ஹோட்டல் கட்டப்பட்ட பிறகு, ஹோட்டல் வளாகத்திலேயே படேல் வசித்து வந்துள்ளார். படேலின் மகனும் டையூவிலேயே வேலை செய்துவந்தார்.
முற்றிய மோதல்
சவ்ஜி படேலுக்கு உனாவில் பூர்வீக வீடு இருந்துள்ளது. தான் உயிரிழப்பதற்கு முன்பு, தனது பேரனை அந்தச் சொத்துக்கு வாரிசாக சவ்ஜி படேல் நியமித்திருந்தார். அந்த வீட்டைச் சுத்தம் செய்தபோது தான் பங்குகள் கண்டெடுக்கப்பட்டது. இப்போது குடும்பத்திலேயே இந்தப் பங்குகளால் மோதல் வெடித்துள்ளது.

சவ்ஜி படேலின் நேரடி வாரிசு தான் என்பதால் இந்த பங்குகள் தனக்கே சொந்தம் என சவ்ஜி படேலின் மகன் உரிமை கோரி வருகிறார். இருப்பினும், தமக்குச் சொந்தமான வீட்டிலிருந்துதான்
இந்தச் சான்றிதழ்களைக் கண்டெடுக்கப்பட்டதாகவும் தனக்கு தர வேண்டும் என்பதே தனது தாத்தாவின் விருப்பம் என பேரன் சொல்கிறார். தொடர்ந்து தற்போது இதுகுறித்து இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.