கொன்னுடாதீங்க ப்ளீஸ்; பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய இளம்பெண் - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

Israel-Hamas War
By Sumathi Oct 09, 2023 07:52 AM GMT
Report

 ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் இளம்பெண் ஒருவர் கெஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.

வெடிக்கும் மோதல்

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளது.

கொன்னுடாதீங்க ப்ளீஸ்; பயங்கரவாதிகளிடம் கெஞ்சிய இளம்பெண் - நெஞ்சை உலுக்கும் வீடியோ! | Teenage Girl Begs Hamas Fighters Shocking Video

இந்நிலையில், 25 வயதான நோவா அர்காமணி என்ற இளம்பெண், அவருடைய காதலர் அவி நாதனுடன் இசைதிருவிழாவில் கலந்து கொள்ள சென்றுள்ளார். அப்போது அவர்களை ஹமாஸ் அமைப்பினர் பிடித்து, தாக்கியுள்ளனர்.

அதிர்ச்சி வீடியோ

தொடர்ந்து பைக்கில் கட்டாயப்படுத்தி அமர வைத்து கடத்திச் சென்றுள்ளனர். அந்த நிலையில், இளம்பெண் ப்ளீஸ் என்னை கொன்னுடாதீங்க என்று கெஞ்சியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இது காண்போர் மனதை ரணமாக்கியுள்ளது. முன்னதாக, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உயிரிழந்த பெண்ணின் உடலை அரை நிர்வாணப்படுத்தி, ஹமாஸ் போராளிகள் தங்களது திறந்த ட்ரக்கில் நகரம் முழுவதும் எடுத்து சென்ற காட்சி வைரலானது. அது மிகப்பெரும் கண்டனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.  

இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்!

இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்!