இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்!

Israel World Israel-Hamas War
By Jiyath Oct 09, 2023 07:26 AM GMT
Report

ஹமாஸ் பயங்கரவாதிகள் ஜெர்மனி நாட்டு பெண்ணை ஆடையின்றி ஜீப்பில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி பெண்

கடந்த சனிக்கிழமை காசா மற்றும் இஸ்ரேல் எல்லையை ஒட்டிய கிராமப்புற பண்ணை நிலத்தில் நோவா திருவிழா நடந்துள்ளது. அமைதி வேண்டி நடத்தப்பட்ட அந்த இசை திருவிழாவில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷானி லௌக் என்ற இளம்பெண், அவரின் தோழியுடன் பங்கேற்றுள்ளார்.

இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்! | German Girl Nude Paraded Through Streets By Hamas

அவர்கள் உணவு உண்டு, நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போது திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதல் நடந்தபோது, அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் ஒட்டியுள்ளனர். அவர்களில் ஷானி லௌக் என்ற ஜெர்மனி பெண்ணும் ஒருவர்.

கொடூர செயல்

இந்நிலையில் பயங்கரவாதிகள், இளம் பெண் ஒருவரை நிர்வாண கோலத்தில் ஜீப்பில் எடுத்து செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த பெண் இஸ்ரேல் ராணுவத்தின் வீராங்கனை என பயங்கரவாதிகள் கூறினர்.

இஸ்ரேல்: இளம்பெண்ணை ஆடையின்றி பயங்கரவாதிகள் இழுத்துச்சென்ற கொடூரம் - கதறும் தாய்! | German Girl Nude Paraded Through Streets By Hamas

ஆனால் அந்த இளம்பெண் ஜெர்மனியை சேர்ந்த ஷானி லௌக் என்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் உறவினர் தொமசினா லௌக்கும், சகோதரியான அதி லௌக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். ஷானி லௌக் பச்சை குத்தும் கலைஞராக இருந்து வந்துள்ளார்.

தனது மகளின் உடலை தந்து விடக் கோரி, இளம்பெண் ஷானி லௌக்கின் தயார் கையில் மகளின் புகைப்படத்தோடு உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.