காதலை ஏற்க மறுத்த சித்தப்பா - பழிவாங்க துடித்து சிறுமி செய்த கொடூர காரியம்!
சிறுமி ஒருவர் 3 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் எல்லப்பா. அதே பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த சிறுமிக்கு எல்லப்பா சித்தப்பா முறை ஆவார்.
இந்நிலையில் அந்த சிறுமி முறை தவறி எல்லப்பாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், சிறுமியின் காதலை அவர் நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி எல்லப்பாவின் அண்ணன் மகளான 3 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமி கைது
பின்னர் இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் எல்லப்பாவை ஒருதலையாக காதலித்த சிறுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தனது காதலை ஏற்காததால் எல்லப்பாவை பழிவாங்க அவருடைய அண்ணன் மகளான 2 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததையும்,
அந்த பழியை எல்லப்பா மீது போட திட்டமிட்டதையும் சிறுமி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து சிறுமியை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.