நிறுத்த முடியாத ஆபாச படம் -நடுவானில் பயணிகளை அலறவிட்ட சம்பவம்!
ஜப்பான் நாட்டிற்குச் சென்ற விமானத்தில் திடீரென ஆபாசப் படம் ஓடிய நிகழ்வு அரங்கேறி உள்ளது .
ஜப்பான்
சர்வதேச விமானங்களில் பயணிகள் நேரத்தைக் கழிக்க சீட்கள் முன்பு இருக்கும் ஸ்கீரின்களில் இதுபோன்ற திரைகள் அமைக்கப்பட்டு இருக்கும். இதில் தங்களுக்குத் தேவையான விருப்பமான படத்தை பார்த்து கொள்ளாம் .
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து ஜப்பானின் ஹனேடா நகருக்குச் செல்லும் குவாண்டாஸ் என்ற பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது. நடுவானில் சென்றுகொண்டிருந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது .
இதனால் அனைத்து ஸ்கிரீன்களிலும் ஆபாச காட்சிகளைக் கொண்ட படம் ஓட தொடங்கி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அதனை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் டேபை க்ளோஸ் செய்யவும் முடியவில்லை.
ஆபாசப் படம்
இதனால் ஆபாசப் படம் சுமார் 1 மணி நேரம் முழுமையாக அதில் ஓடியிருக்கிறது. இந்த விமானத்தில் குழந்தைகள் உட்படப் பலரும் குடும்பம் குடும்பமாகப் பயணித்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்றே புரியாமல் அவர்கள் சங்கடத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததாக குவாண்டாஸ் நிறுவனம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.