மழை போல் கொட்டிய மனித மலம்.. அலறி ஓடிய மக்கள் - சீனாவில் நடந்த வினோதம்!
சீனாவில் மனித மலம் மழை போல மக்கள் மீது கொட்டியுள்ளது.
சீனா
சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் நான்னிங். இந்த நகரில் நெடுஞ்சாலை நடுவே புதியதாகக் கழிவுநீர் குழாய் பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்காகக் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 24 அன்று வெடித்து 33 அடி உயரத்திற்குக் கழிவுநீர் குழாய் வெடித்துச் சிதறியது.இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
மேலும் அந்த பகுதியில் சென்ற கார்களின் ஜன்னல் கண்ணாடி, முன்பக்க கண்ணாடி முழுவதும் மனிதக் கழிவுப் படிந்தது.அதுமட்டுமில்லாமல் நடந்து சென்ற சிலரின் தலை முதல் கால் வரை மனித மலம் மழை போல் பொழிந்ததால் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்.
மலம் மழை
மேலும் இந்த சம்பவம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் குழாயில் அழுத்த அளவு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கட்டுமான பணியாளர்கள் சோதித்துப் பார்த்தபோது தான் இந்த திடீர் வெடிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்து இல்லை இது எனவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு அங்குச் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவானது. இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.