உள்ளாடைகளை கழற்றி வேலியில் தொங்கவிடும் இளம் பெண்கள் - நியூசிலாந்தில் நடக்கும் வினோதம்!
கார்டோனா வேலியில் உள்ளாடைகளின் எண்ணிக்கை என்பது அதிகரிக்கத் தொடங்கியது.
நியூசிலாந்து
ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு வகையான பழக்க வழக்கங்கள் ,சடங்குகளைப் பின்பற்றி வருகின்றனர்.
குறிப்பாக இந்தியாவின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பொதுமக்கள் பேசும் மொழிகளில் தொடங்கி ,பண்பாடு, இறைவழிபாடு ,விழா கொண்டாடும் முறைகளில் பல மாற்றங்கள் என்பது இருந்து வருகிறது.
அந்த வகையில் நியூசிலாந்து நாட்டிலும் ஒரு வினோத பழக்கத்தைப் பெண்கள் பின்பற்றி வருகின்றனர். நியூசிலாந்தின் சென்ட்ரல் ஒடாகோ மாவட்டத்தில் உள்ள கார்டோனா பகுதிக்குச் செல்லும் பெண்கள் அங்குள்ள வேலியில் தங்களின் உள்ளாடையை (Bra) கழற்றி விட்டுச் செல்லும் பழக்கம் உள்ளது.
இந்த வேலியானது சாலையையொட்டி அமைந்துள்ளது. அந்த பகுதியில் விட்டுச் செல்லப்படும் உள்ளாடைகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது அந்த வேலி என்பது பிரா வேலி என்றே அழைக்கப்பட்டு வருகிறது.
வினோதம்
தற்பொழுது இந்த பகுதிக்கு அதிகமான பெண்கள் சென்று வருவதால் அது சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது. இதற்குக் காரணம், 26 ஆண்டுகளுக்கு முன், கரோடோனா வேலியில் பெண்கள் சிலர் 4 உள்ளாடைகளை விட்டுச் சென்றுள்ளனர்.
இதனைப் பார்த்த பிற பெண்களும் அடுத்தடுத்து உள்ளாடைகளை அங்கு விட்டுச் சென்றனர்.இதுவே நாளடைவில் கரோடானா வேலியில் உள்ளாடைகளை விட்டுச் செல்லும் பெண்களுக்குத் தீங்கு நடக்காது என்றும் மனதில் நினைத்த விஷயங்கள் நடக்கும்.
விருப்பமான ஒருவர் கணவராக அமைவார் என்ற கட்டுக்கதை பரவ தொடங்கியது.இதனால் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து அங்குச் சென்ற பெண்கள் உள்ளாடையைக் கழற்றி அதில் தனது நிறைவேற வேண்டிய ஆசையை எழுதி வேலியில் மாற்றிவிட்டுச் செல்கின்றனர்.