அடுத்து நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம் - பீதியில் மக்கள்
துருக்கியை தொடர்ந்து நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம்
நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கி.மீ தொலைவில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்ரியல் புயலால் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதத்தை சந்தித்த நிலையில் நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் மேலும் அச்சமடைய வைத்துள்ளது.