மாடு ஏப்பம் விட்டால் வரி...அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
நியூசிலாந்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் ஏப்பம் விட்டால் வரி விதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட துவங்கியுள்ளனர்.
மாடு ஏப்பம் விட்டால் வரி
நியூசிலாந்தில் பிரதம மத்திரி ஜசிந்தா ஆர்டெர்ன், 2050 ஆம் ஆண்டுக்குள், நாட்டின் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாக ஆகிவிடும் என்று உறுதியளித்துள்ளார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2030 ஆம் ஆண்டுக்குள் பண்ணை விலங்குகள் மூலம் வெளியாகும் மீத்தேன் உமிழ்வை 10 சதவீதம் குறைக்கவும், 2050க்குள் 47 சதவீதம் வரை குறைக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
இந்த நிலையில் மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கப்படும் என்ற திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இத்திட்டத்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை எதிர்க்கும் வகையில் சிறிய அளவிலான பேரணிகளை நடத்தினர்.
மனிதர்களை விட கால்நடைகள் அதிகம்
நியூசிலாந்தில் மக்கள் தொகையை விட பண்ணை கால்நடை வளர்ப்பு என்பது தான் அதிகம். இந்த நிலையில் நியூசிலாந்தில் 10 மில்லியன் மாட்டிறைச்சிகான மாடுகள் மற்றும் பால் வழங்கும் மாடுகள் உள்ளன.
26 மில்லியன் செம்மறி ஆடுகள் உள்ளன. மனிதர்களை விட கால்நடைகள் தான் அதிக அளவில் சுற்று சூழலை பாதிக்கும் வாயுக்களை வெளியிடுகிறது.
கால் நடைகள் ஏப்பம் விடுவதன் மூலம் வெளியிடப்படும் மீத்தேன் அளவு அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.