ஒரு வாரம்.. தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!

Tamil nadu
By Vinothini Oct 05, 2023 04:40 AM GMT
Report

தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போராட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது கடந்த செப்டம்பர் 28-ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

teachers-arrested-for-protesting-in-tamilnadu

இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று பள்ளிகள் திறப்பு.. விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்!

இன்று பள்ளிகள் திறப்பு.. விடுப்பு எடுத்து தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்!

கைது

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், முதல்வர் பதிலளிக்கவேண்டும் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருவல்லிக்கேணி காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தினார்.

teachers-arrested-for-protesting-in-tamilnadu

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு நேற்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டது. ஆனால் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சார்பில் முறையான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் கூறினர். டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.