மாட்டுக்கறி தின்ற திமிரா?.. மாணவியை தன் ஷூவை துடைக்கவைத்து துன்புறுத்திய ஆசிரியை - கொடுமை!
ஆசிரியை ஒருவர் மாணவியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
கோவை, அசோகபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் அபிநயா. அதே பகுதியை சேர்ந்த மாணவி அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை ஆசிரியை 2 மாதங்களாகவே கொடுக்கைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த ஆசிரியை மாணவியின் பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என கேட்டுள்ளார், அப்பொழுது மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக தெரிவித்ததும், மாட்டிறைச்சி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா? என்று பேசியுள்ளார்.
கொடுமை
இந்நிலையில், அந்த மாணவி பெற்றோரையும் அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்த வேண்டாம் என மாணவி கூறியதால், எதிர்த்து பேசுவதாக கூறி, அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார், பின்னர் தலைமை ஆசிரியையிடம் புகாரளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், சக மாணவிகள் முன்னிலையில் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தி, மாணவியை அவமானப்படுத்தியதுடன், டிசி கொடுத்துடுவேன் என்று மிரட்டியுள்ளார். பின்னர், ராஜ்குமார் என்ற ஆசிரியர் ஒருவரும் அநாகரீகமாக நடந்துகொண்டதாக கூறியுள்ளார்.
இதனால், மாணவி பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகாரளித்துள்ளார். மேலும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.