நோட்டு புத்தகத்தில் இருந்த காதல் கடிதம் - பெற்றோர் ஆசிரியை இடையே மோதல்..!
9 ஆம் வகுப்பு மாணவியின் நோட்டு புத்தகத்தில் இருந்த காதல் கடிதத்தால் பள்ளியே போர்களமாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நோட்டு புத்தகத்தில் காதல் கடிதம்
ஆந்திரா மாநிலம் ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் புரோதட்டூர் ஒய்.வி.எஸ் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு 9 ஆம் வகுப்பில் மாணவி ஒருவர் பயின்று வருகிறார். அவரின் நோட்டு புத்தகத்தில் காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது. இதை சக மாணவர்கள் எடுத்து பள்ளியின் ஆங்கில பிரிவு ஆசிரியை சுனந்தாவிடம் கொடுத்துள்ளனர்.
ஆசிரியர் அந்த கடிதத்தை பள்ளியின் தலைமையாசிரியர் கஷ்ரி பிரசாத் ரெட்டியிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் மாணவியின் அம்மாவை பள்ளிக்கு வரவழைத்துள்ளனர்.
தொடர்ந்து காதல் கடிதத்தில் இருந்த கையெழுத்து மாணவியோடையது கிடையாது என்பது தெரியவந்துள்ளது. மாணவி மற்றும் அவரின் அம்மாவை அனுப்பி வைத்துள்ளார் தலைமையாசிரியர்.
ஆசிரியை மாணவியின் தாய் இடையே மோதல்
வகுப்பறைக்கு வந்த மாணவியிடம் ஆசிரியர் சுனந்தா கடிதத்தின் மீது கேள்வி எழுப்பி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி உடனடியாக தனது அம்மாவிற்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய் பள்ளிக்கு வந்து ஏன் எனது மகளை அடித்தீர்கள் என ஆசிரியையிடம் கேள்வி எழுப்பினார்.
ஆசிரியையின் கணவர் சம்பவம் குறித்து பள்ளிக்கு வந்துள்ளார். தலைமையாசிரியர் முன்னிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் ஒருகட்டத்தில் உச்சகட்டத்தை எட்டியதால் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டனர்.