புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. ஆசிரியையை ஆபாசமாக படம் எடுத்த ஆசிரியர் - போட்டுக்கொடுத்த சிறுவன்!
ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியையை ஆபாசமாக படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச படம்
சிங்கப்பூரில் உள்ள ஆரம்பப்பள்ளியில் 44 வயதான கணித ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். ஒருமுறை அப்பள்ளியில் நடந்த ஒரு தேர்வின் போது, அந்த 28 வயது பெண் ஆசிரியையின் Up-Skirt படங்களை அந்த ஆசிரியர் எடுப்பதை மாணவர் ஒருவர் பார்த்துள்ளார். அந்த மாணவன் அளித்த புகாரில் தான் அந்த நபர் மீது வோயூரிசம் மற்றும் Computer Misuse Act சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
போலீஸ் விசாரணையில், 2021 ல், பாதிக்கப்பட்ட பெண் தனது வகுப்பறையில் இசை கற்பித்துக் கொண்டிருந்தபோது, அந்த நபர் தனது கணித வகுப்பிற்குத் தயாராக காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு சென்றுள்ளார், அப்பொழுது அவர் தொலைபேசியைப் பதுக்கி வைத்து, ரகசியமாக அப்பெண்ணின் Up-Skirt படங்களை எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அந்த பெண் ஆசிரியர்கள் அறையில் இருந்தபொழுது அவர் அசந்த நேரத்தில் அவருடைய செல் போனின் இருந்து தனக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும், போலீசார் அவரது தொலைபேசியை கைப்பற்றி பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்கள் அந்த சாதனத்தில் சேமிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
பின்னர், அந்த நபரின் மடிக்கணினியை சோதனையிட்டனர், அதில் ஒரு வருடமாக அந்த நபர் ரகசியமாகப் பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டறிந்தனர். இந்த வழக்கு ஓராண்டாக நடந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு தீர்ப்பிடப்பட்டுள்ளது.
https://ibctamilnadu.com/article/female-teacher-drinks-and-teaching-classroom-1662725988