ஜன்னல் கம்பியில் கட்டிவைக்கப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி.. கொடுமைப்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் - என்ன நிகழ்ந்தது?
பள்ளியில் 1ம் வகுப்பு சிறுமியை ஜன்னல் கம்பியில் கட்டிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கப்பள்ளி
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் சந்தைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். இவர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்ததால் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவியை ஜன்னலில் கட்டி வைத்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் பரவியது. ஆசிரியர் மாணவியை ஜன்னலில் கட்டி வைத்ததாகவும் மாணவி பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே கயிறு கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இதய நோயால் இறந்த 3 மாத குழந்தை.. காதல் மனைவி செய்த காரியம், சோகத்தில் கணவர் எடுத்த முடிவு - அதிர்ச்சி!
என்ன நடந்தது?
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த செய்தி தவறு என்று அந்த சிறுமியின் தாய் கூறியுள்ளார். சிறுமி பள்ளிக்கு செல்லாததாலும் பள்ளியில் விட்ட பிறகு அடிக்கடி வகுப்பறையிலிருந்து வெளியே ஓடி வருவதாலும் மாணவியின் தாயே, கயிறு கட்டி வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் சுமதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் விளக்கம் பெற்று மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை ஆசிரியர், மாணவி மற்றும் மாணவியின் தாயாரிடம் இன்று மாலை விசாரணை நடத்தவுள்ளார் என்று கூறப்படுகிறது.