இதய நோயால் இறந்த 3 மாத குழந்தை.. காதல் மனைவி செய்த காரியம், சோகத்தில் கணவர் எடுத்த முடிவு - அதிர்ச்சி!
தங்களது குழந்தை இறந்ததால் கணவன் மனனவி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி, 30 வயதான இவர் லாரி டிரைவராக கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில் பணியாற்றி வந்தார். இவருக்கு குமாரி மாவட்டம் அபிசால்மியா என்ற 25 வயதான இன்ஜினியர் பெண்ணுக்கும் இடையே முக நூல் மூலம் காதல் ஏற்பட்டது.
இவர்களது வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை, அதனால் இருவரும் கிருஷ்ணகிரிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகிழ்ச்சியாக 2 வருடம் வாழ்ந்து வந்தனர், இவர்களுக்கு கடந்த 6 மாதம் முன்பு பெண் குழந்தை பிறந்தது.
விபரீதம்
இந்நிலையில், அந்த குழந்தைக்கு இதய பாதிப்பு இருந்தது, அவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதனால் பெரும் சோகத்தில் இருந்த அபிசால்மியா யாரிடமும் சரிவர பேசாமல் வேதனையில் இருந்து வந்தார்.
தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6-ம் தேதி இரவு தனது கணவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தை மற்றும் காதல் மனைவியை இழந்து வேதனையில் தவித்த அந்த லாரி டிரைவர் துக்கம் தாங்காமல் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.