ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சிக்கிய ஆசிரியர்
ஆபாச வீடியோக்களை காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
மகாராஷ்டிரா, காஷிகேட் பகுதியில் ஜில்லா பரிஷத் அரசு பள்ளி உள்ளது. இங்கு பிரமோத் சர்தார் (47) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பிரமோத் சர்தார் மாணவிகளுக்கு தனது செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக அவர் 6 மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
ஆசிரியர் கைது
தொடர்ந்து, இதனை வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். பள்ளியில் தேர்வில் தோல்வியடைய வைப்பதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து மாணவிகள் அமைதியாக இருந்த நிலையில் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
ஒருகட்டத்தில் இதனை தாங்கமுடியாத மாணவி ஒருவர் குழந்தைகள் நல மையத்துக்கு போன் செய்து தங்களுக்கு நேர்ந்த துயரம் பற்றி புகாரளித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் நல மையத்தினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.
6 மாணவிகள் சார்பில் போலீசில் அளித்த புகாரின் பேரில் பிரமோத் சர்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவீந்திரா கூறுகையில்,'' இச்செய்தியை கேள்விப்பட்டு எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானே நடவடிக்கை எடுத்திருப்பேன்''எனத் தெரிவித்துள்ளார்.