இரக்கமின்றி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - தேவாலயத்தில் பாதிரியார் செய்த கொடூரம்!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை..
காஞ்சிபுரம் மாவட்டம், இராஜாஜி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய அம்மா இறந்த நிலையில் அக்கா மற்றும் அப்பாவுடன் வசித்து வருகிறார்.
சிறுமியின் தந்தை தேவாலயத்தில் தோட்ட வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் காலம் அதே தேவாலயத்தில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, அந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்துவரும் தேவஇரக்கம் என்ற நபர்
பாதிரியார் செய்த கொடூரம்
இரவு நேரத்தில் சிறுமி படுத்திருந்த நேரத்தில் அவரை பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி கத்தியபடியே அங்கிருந்து வீட்டிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த சிறுமியின் அக்கம் பக்கத்து வீட்டினருக்கு பாதிரியார் பாலியல் துன்புறுத்திய விஷயம் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்திட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு இம்மனு அளிக்கப்பட்டது.
இதன்பேரில் விசாரித்து உண்மை அறிந்த பிறகு புகார் அடிப்படையில் பாதிரியார் தேவஇரக்கம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியாரின் செயல் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.