மர்ம முறையில் உடல்கள் அடக்கம்; பாலியல் தொல்லை - மனநல காப்பகத்தின் பகீர் பின்னணி!
மனநல காப்பக உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மனநல காப்பகம்
நீலகிரி, குந்தலாடி பகுதியில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மருத்துவர் அகஸ்டின் என்பவர் மனநல காப்பகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக தகவல்கள் பரவியது. இதனையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான குழுவினர் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிர்ச்சி பின்னணி
அப்போது, அனுமதி இல்லாமலும், சுகாதாரமற்ற முறையில், எந்தவித மருத்துவ வசதி இல்லாமல் மனநல காப்பகம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதனால் காப்பகத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்,
மனநலம் பாதிக்கப்பட்ட 15 பேரை கோவையில் உள்ள காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், தலைமறைவாக இருந்த காப்பக உரிமையாளர் அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் ஊழியர்கள் என 10 பேருக்கு போலீஸார் சம்மன் வழங்கினர்.
இதற்கிடையில், காப்பகத்தில் இருந்த 16 வயதில் சிறுவன் ஒருவன் அகஸ்டின் தன்னிடம் பாலியல் ரீதியாக நடந்து கொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 10 பேரும் காவல் நிலையத்தில் ஆஜராகினர். சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக அவர்களிடம், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.