மனநலம் பாதிக்கப்பட்டவர்களை .. குணமாக்கிய காதல் : திருமணம் செய்து வைத்த மருத்துவமனை

Tamil nadu Chennai
By Irumporai Oct 28, 2022 06:05 AM GMT
Report

கீழ்பாக்கம் மன நல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது சமூக வலைத்தளங்களில் ஆச்சரியத்தையும் , நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்ததினால் சிக்கிச்சை

இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னையினை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும் வேலூரை சேர்ந்த 32 வயதான தீபாவும் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு அரசு மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறத் தொடங்கினர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை .. குணமாக்கிய காதல் : திருமணம் செய்து வைத்த மருத்துவமனை | Two Inmates Of Institute Of Mental Health Marry

தொடர்ந்து சிகிச்சை பெற்ற நிலையில் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டுள்ளனர் , மேலும் மருத்துவமனையில் உள்ள care centre -ல் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.

காப்பகத்தில் மலர்ந்த காதல்

தந்தையினை இழந்து மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வந்து முதல் பார்வையிலே மகேந்திரனுக்கு தீபாவின் மேல் காதல் வந்துள்ளது.

முதல் சந்திப்பிலேயே மகேந்திரன் திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்க, சற்றே தயங்கிய தீபா சிறிது காலத்திற்குப் பிறகு மகேந்திரனிம் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார். தந்தையினை இழந்த பிரிவினால் பமனநோய்க்கு ஆளான தனக்கு மகேந்திரனே மருந்தாக கிடைத்துள்ளதாக தீபா கூறியுள்ளார்.

திருமணம் செய்து வைத்த அமைச்சர்

ஆரம்பத்தில் இருவர்களின் காதலுக்கு ரெட் சிக்னல் கொடுத்த மனநல காப்பகம் இரண்டு ஜோடிகளும் , முழுமையாக சிகிச்சையில் இருந்து குணமடைந்த பிறகு காதலை ஏற்று திருமணம் நடைபெற்று உள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை .. குணமாக்கிய காதல் : திருமணம் செய்து வைத்த மருத்துவமனை | Two Inmates Of Institute Of Mental Health Marry

இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார்.இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும்வந்து மணமக்களை வாழ்த்தினர்.

அன்று மனதை தொலைத்து காப்பகம் வந்த இந்த இவர்கள் , இன்று காதலால் ஒரு இதயமாகி திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளனர் , இவர்களின் வாழ்வு செம்மையாக நாமும் வாழ்த்துவோம் ... வாழ்க மணமக்கள்