14 வயது சிறுவனுக்கு போதை பொருள் கொடுத்து பலமுறை சீரழித்த ஆசிரியர் - கதறும் மாணவர்!
ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
அமெரிக்காவில் உள்ள மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் 31 வயதான மெலிசா மேரி கர்டிஸ். இவர் தனது 22 வயதில் ஆசிரியராக இருந்தபோது 14 வயதான 8ம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 8 ஆண்டுகள் கழித்து தற்பொழுது புகாரளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், "கடந்த 2015ஆம் அந்த நபர் சிறுவனாக இருந்த போது இந்த பாலியல் அத்துமீறல் தொடங்கியுள்ளது. அந்த சிறுவனிடம் இவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறினர்.
போலீஸ் விசாரனை
இந்நிலையில், விசாரணையில் கடந்த 2015ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் மே மாதம் வரை இந்தச் சம்பவம் நடந்துள்ளன. அந்த பெண் தனது கார் தொடங்கிப் பல இடங்களில் வைத்து மாணவரிடம் அத்துமீறியுள்ளார்.
மேலும், அந்த ஆசிரியர் மது மற்றும் போதை பொருட்களை கொடுத்து அந்த மாணவர் மயக்கத்தில் இருக்கும்போது அத்துமீறியுள்ளார். ஆசிரியர் அந்த சிறுவருடன் 20 முறைக்கு மேல் உறவு கொண்டதாக தெரியவந்துள்ளது. பின்னர், ஆசிரியர் தான் செய்ததை ஒப்புக்கொண்டார், அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்தனர்.