பெட்டி என நினைத்து மனிதனை நசுக்கிய ரோபோ - தப்பமுடியாமல் துடிதுடிக்க இறந்த நபர்!
பணியாளர் ஒருவரை பெட்டி என்று நினைத்து ரோபோ கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோ
தென்கொரியா நாட்டில், ரோபோட்டிக் நிறுவனத்தில் 40 வயது நபர் ஒருவர் பணிபுரிந்துவந்தார். இவர் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள விளைபொருள்கள் விநியோக மையத்திலும் பணிபுரிந்திருக்கிறார். அந்த மையத்தில் காய்கறிப் பெட்டிகளை எடுத்து சீல் செய்யும் பணிக்கு ரோபோக்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
அப்பொழுது அங்கு காய்கறி பெட்டிக்கும் மனிதருக்கும் வித்தியாசம் தெரியாமல் அந்த ஊழியரை காய்கறி பெட்டி என்று நினைத்து தூக்கிவிட்டது. அந்த ரோபோவின் இறுக்கமான பிடியிலிருந்து தப்ப முடியாமல் திணறியுள்ளார்.
உயிரிழப்பு
இந்நிலையில், அந்த ரோபோ ஊழியரை பெல்ட்டில்வைத்து மெஷினுக்குள் திணித்துள்ளது. அதனால் அந்த நபரின் தலை, முகம், நெஞ்சுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். தென்கொரியாவில், ரோபோ தொழிநுட்பக் கோளாறு காரணமாக தாக்கப்பட்டு இறந்தவர்களில் இந்த நபர் இரண்டாவது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.