நடுவானில் பயிற்சியாளர் மாரடைப்பால் மரணம் - பதறிய விமானி
நடுவானில் பறக்கும்போது பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு
இங்கிலாந்து, லங்காஷைர் பகுதியில் 57 வயது மூத்த விமான பயிற்சியாளரை அழைத்து கொண்டு விமானி ஒருவர் சென்றுள்ளார். செல்லும்போது இருவரும் நன்றாக பேசி கொண்டு இருந்துள்ளனர்.
விமானம் உயரே சென்றபோது, திடீரென பயிற்சியாளரின் தலை திடீரென சரிந்துள்ளது. அவர் தூங்குவது போன்று நடிக்கிறார் என விமானி நினைத்துள்ளார். அதனால், விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்துள்ளார். தொடர்ந்து, பயிற்சியாளரின் தலை, விமானியின் தோளில் சாய்ந்துள்ளது.
பயிற்சியாளர் மரணம்
அப்போதும், நகைச்சுவைக்காக அவர் அப்படி செய்கிறார் என நினைத்தபடி பறந்துள்ளனர். அதனையடுத்து விமானம் தரையிறங்கியதும் பயிற்சியாளர் எழும்பாமல் இருந்துள்ளார். அதனால், விமானி அவசரகால விமான பணியாளர் ஒருவரை உதவிக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவில், மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.