கழிவறையில் சிறுமியுடன் பாலியல் உறவில் ஆசிரியை - வாழ்நாள் தடை விதிப்பு!
மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியை கொடூரம்
இங்கிலாந்து பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் எரின் ஹெப்ல்வைட். இவர் தனது 16 வயது மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆசிரியை ஹெப்ல்வைட் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையில் ஆசிரியை ஹெப்பிள்வைட் 16 வயது மாணவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தும், தன்னுடைய நிர்வாண படத்தை அனுப்பி வைத்தும் பாலியல் செயல்பாட்டுக்கு தூண்டியுள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு
மேலும், உணவகம் ஒன்றின் கழிவறையில் வைத்து சிறுமியுடன் ஆசிரியை உறவில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் முன்பாக பாலியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.
மாணவியை பாலியல் நோக்கத்துடன் முத்தமிட்ட முதல் நபராகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
சிறுமியை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதன் அடிப்படையில், இனி ஹெப்பிள்வைட் ஆசிரியர் பணியை மேற்கொள்ளவே கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.