மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுப்படுவது குற்றமாகுமா? - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

By Swetha Subash May 17, 2022 09:40 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

திருமண உறவில் மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுப்படுவதை குற்றமாக்குவது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்ற அளித்த இரு வேறுபட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 375-ன் கீழ் மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் அவருடன் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டால் அதை பாலியல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று ஏராளமான மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுப்படுவது குற்றமாகுமா? - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! | Marital Rape Plea Filed In Supreme Court

இது குறித்து கடந்த மே 11-ந் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவது குறித்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கியது.

மனைவியுடன் கட்டாய பாலியல் உறவில் ஈடுப்படுவது குற்றமாகுமா? - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! | Marital Rape Plea Filed In Supreme Court

தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜீவ், மனைவியின் விருப்பம் இல்லாமல் அவருடன் கணவர் பாலியல் உறவு கொள்ளும் பொழுது அதை பாலியல் குற்றமாக அறிவிக்காமல் இருப்பது சட்டவிரோதம் என்றும், நீதிபதி ஹரிசங்கர் அதனை சரியானது என்றும் இரு வேறு விதமான  தீர்ப்பு வழங்கி இருந்தனர்.

இந்த இருவேறு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாரர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.