ஹோட்டலில் கணவனுடன் சண்டை - ஆத்திரத்தில் பக்கத்து அறை சிறுவர்களுடன் தகாத உறவில் பெண்!

United States of America Sexual harassment Crime
By Sumathi Feb 05, 2024 10:56 AM GMT
Report

சிறுவர்களுடன், பெண் பாலியல் உறவில் ஈடுப்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுடன் சண்டை  

அமெரிக்கா, ரோஸ்வில்லே பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ஆலிசன் ஸ்கார்டின்(38) என்ற பெண் கணவருடன் சென்றுள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஹோட்டலில் கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாகியுள்ளது.

ஆலிசன் ஸ்கார்டின்(38)

இதனால், நீச்சல் குளம் அமைந்த பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ஆக்கி விளையாட்டு வீரர்களான சிறுவர்கள் குளித்து கொண்டு இருந்தனர். அவர்களிடன் பேசிய பெண் திருமண வாழ்க்கை குறித்தும் சச்சரவுகள் குறித்தும் பேசியுள்ளார்.

கல்யாணத்திற்கு முன்பே பாலியல் உறவு - ஸ்ட்ரிக்டா கடைபிடிக்கும் இந்தியாவில் ஓர் வினாத கிராமம்!

கல்யாணத்திற்கு முன்பே பாலியல் உறவு - ஸ்ட்ரிக்டா கடைபிடிக்கும் இந்தியாவில் ஓர் வினாத கிராமம்!

பெண் கைது

மேலும், அறைக்கு திரும்பியதும் ஸ்நாப்சேட் வழியே சிறுவர்களில் ஒருவரை ஆலிசன் தொடர்பு கொண்டு கணவருடன் சண்டை என்பதால் அவர்களது அறைக்கு வரக் கேட்டுள்ளார். தொடர்ந்து அங்கு சென்ற பெண் 2 சிறுவர்களுடன் உறவில் ஈடுப்பட்டுள்ளார்.

ஹோட்டலில் கணவனுடன் சண்டை - ஆத்திரத்தில் பக்கத்து அறை சிறுவர்களுடன் தகாத உறவில் பெண்! | Us Woman Arrested For Sex With Teen Boys In Hotel

இது குறித்த அறிந்த மற்றொரு சிறுவனிடம் எங்களை கட்டாயப்படுத்தி பாலியல் செயல்களில் ஈடுபட்டது போன்று, நெருக்கடியாக நாங்கள் உணர்ந்தோம். கடைசியில், அவரை அறையில் இருந்து வெளியேறும்படி கூறி விட்டோம் எனத் தெரிவித்துள்ளணர்.

அதன்பின், வீட்டிற்கு திரும்பியதும் அந்த 2 சிறுவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். அதனையடுத்து அந்த பெண் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போலீஸார் அவரை கைது செய்து விசாரித்ததில் சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.