16வயது மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பி உல்லாசத்துக்கு அழைத்த ஆசிரியை - அதிர்ச்சி சம்பவம்!
பள்ளி மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பி உல்லாசத்துக்கு அழைத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிடம் தகாத செயல்
அமெரிக்காவின் மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்தவர் ரிக்கி லின் லாப்லின்(24). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அந்த பள்ளியில் படிக்கும் 16 வயதான மாணவனுக்கு ஆசிரியை தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மாணவனின் நிர்வாண புகைப் படங்களையும் அனுப்பும்படி கேட்டுள்ளார். மேலும், அந்த மாணவனை தன்னுடன் பாலியல் உறவு கொள்ள வீட்டிற்கு அழைத்துள்ளார் ஆசிரியை. இந்த விவகாரம் பள்ளி முழுவது தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார் அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர்.
ஆசிரியை கைது
அதில் "ஆசிரியை தனக்கு அவரது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாகவும், ஆசிரியையிடம் தனது நிர்வாண படங்களை பரிமாறி கொண்டதாகவும் மாணவன் தெரிவித்தார். இது தொடர்பாக ஆசிரியையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாணவனுக்கு நிர்வாண படங்களை அனுப்பியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், அவரின் செல்போனில் மாணவர்களின் நிர்வாண புகைப்படங்களையும் ஆசிரியை வைத்திருந்துள்ளார். இதனையடுத்து கற்பழிப்பு முயற்சி, குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருத்தல், சாட்சியை சேதப்படுத்துதல், சிறுவர்களுக்கு ஆபாச தகவல்களை அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்த ஆசிரியை போலீசார் கைது செய்தனர்.