Wednesday, May 7, 2025

16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா - அந்த நடிகை யார் தெரியுமா?

Hollywood
By Sumathi 2 years ago
Report

கிறிஸ் எவான்ஸ், தனது காதலியை கரம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிறிஸ் எவான்ஸ்

மார்வல் படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதிலும், ஹீரோக்களுள் ரசிகர்களின் தனி கவனத்தை பெற்றவர், கிறிஸ் எவான்ஸ்(42). இவரை ‘கேப்டன் அமெரிக்கா’ என அழைக்கின்றனர்.

16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா - அந்த நடிகை யார் தெரியுமா? | Captain America Chris Evans Secret Marriage

இவர் போர்த்துகீஸ்-அமெரிக்க நடிகை ஆல்பா பேப்டிஸ்டாவை(26) டேட்டிங் செய்து வருவதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியானது. இவரும் கிறிஸ் எவான்ஸும் ஒரு திரைப்பட விழாவில் பார்த்துக்கொண்டதாகவும்

திருமணம்? 

அதிலிருந்து இருவரும் ஆங்காங்கே வெளியில் சென்று தங்களது காதலை வளர்த்து கொண்டதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

16 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த கேப்டன் அமெரிக்கா - அந்த நடிகை யார் தெரியுமா? | Captain America Chris Evans Secret Marriage

இந்நிலையில், தங்களது வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஐயர்ன் மேனாக நடித்த Robert Downy Jr, தோர் கதாப்பாத்திரத்தில் நடித்த Chris Hemsworth, பிரபல நடிகை Emily Blunt உள்ளிட்ட பலர் அவர்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இவர்கள் அனைவரும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.