‘எனக்கு 77 உனக்கு 20’ - 20 வயது இளம்பெண்ணை கரம் பிடிக்கும் 77 வயது முதியவர்
காதலுக்கு கண் இல்லை என்பார்கள் அதுபோல தான் மியான்மர் நாட்டின் காதல் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரில் வசித்து வரும் 20 வயதான ஜோ என்ற இளம் மாணவி இங்கிலாந்தை சேர்ந்த 77 வயதான டேவிட் என்பவரை காதலித்து வருகிறார்.
இசை அமைப்பாளராக இருக்கும் டேவிட்டிற்கு குழந்தைகள் இல்லாத நிலையில் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
57 வயது இடைவெளி இருக்கும் இவர்களுக்கிடையே ஆயிரக்கணக்கான மைல் தூரம் இருந்தாலும் இவர்களின் காதல் மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறதாம்.
ஜோ மற்றும் டேவிட் டேட்டிங் தளம் மூலம் தான் ஒருவரை ஒருவர் முதலில் சந்தித்துள்ளனர். டேட்டிங் தளத்தில் டேவிட்டை கண்டுபிடித்ததை, ஜோ தன்னை பற்றிய விளக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மியான்மர் மற்றும் கோவிட் உள்நாட்டு சூழ்நிலை காரணமாக இருவரும் விலகி இருப்பதாகவும் ஜோவின் வழிகாட்டியாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக டேவிட் கூறுகிறார்.
விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் ஜோவின் பாஸ்போர்ட் தயாரான உடன் தன்னை சந்திக்க அவர் இங்கிலாந்துக்கு வருவார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் டேவிட்.
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் IBC Tamil
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan