வானிலிருந்து கொட்டப்பட்ட ரூ.6 கோடி பணம்; அள்ளி சென்ற மக்கள் - எதற்காக?
செக் குடியரசு நாட்டின் செல்வாக்குமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ரூ.6.5 கோடி பணத்தை கீழே கொட்டியுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளர்
செக் குடியரசு நாட்டின் செல்வாக்குமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பட இயக்குநராக இருப்பவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என்று அழைக்கப்படுகிறார்.
காஸ்மா சமூக வலைதளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு சில போட்டிகள் வைத்து, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு பெரிய தொகையை பரிசளிக்கத் தொடங்கினார். அண்மையில் இதேபோல அவர் வைத்த போட்டியில் யாரும் வெற்றி பெறவில்லை.
அதனால் "யாரும் வெற்றி பெறாத இந்த பணத்தைக் கொண்டு என்ன செய்ய வேண்டும்? என்று நீங்களே ஐடியா கொடுங்கள்'' என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்கு, விளையாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு அந்தப் பணத்தைப் பகிர்ந்தளிக்கவும் என்று பெரும்பாலானோர் கமெண்ட் செய்துள்ளனர்.
கொட்டிய பண மழை
இதனையடுத்து போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பதிப்பில் சுமார் ரூ.6.5 கோடி)பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதற்காக ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை வானிலிருந்து கொட்டப் போவதாக அறிவித்தார்.
காஸ்மா சொல்லியது போலவே சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் பணத்தை கீழே வீசினார். அங்கு வந்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது. இதனை கண்ட பலரும், கஸ்மாவை தாராளமான மனப்பான்மை கொண்ட பிரபலம் என்று பாராட்டியும், சிலர் அவர் செய்த செயல் தவறானது என்றும் விமர்சித்தும் வருகின்றனர்.