13 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் குழந்தை பெற்ற 34 வயது ஆசிரியை - சிறுவன் பகீர் வாக்குமூலம்!
மாணவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு ஆசிரியை குழந்தை பெற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆசிரியை கர்ப்பம்
அமெரிக்கா, வாரிங்டன் பகுதியை சேர்ந்தவர் லாரா கேரன்(34). மிடில் டவுன்ஷிப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
அப்போது, அவருடைய வகுப்பில் படித்து வந்த சிறுவன் ஒருவனுடன் பாலியல் உறவு கொண்டதில் கர்ப்பமாகியுள்ளார். தற்போது 5 வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், இந்த குழந்தையும், சிறுவனும் உருவத்தில் ஒத்திருக்கின்றனர் என அதுபற்றிய பேஸ்புக் பதிவை பார்த்த சிறுவனின் தந்தை சந்தேகமடைந்துள்ளார். தொடர்ந்து போலீஸில் புகாரளித்துள்ளார்.
சிறுவன் வாக்குமூலம்
அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனின் தாயார் கேரனிடம் சிறுவனையும், சிறுவனின் சகோதரியையும் ஒன்றாக தங்க அனுமதித்துள்ளார். சிறுவனின் சகோதரி இதுகுறித்து கூறுகையில்,
நாங்கள் கேரனின் வீட்டில் வசித்தபோது, தூங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது, கேரனின் படுக்கையில் சகோதரன் படுத்திருப்பான். சகோதரனுடன் கேரன் பாலியல் உறவில் ஈடுபட்டார். கேரனுக்கு குழந்தை பிறந்த பின்னர், அதனை தந்தை போன்றே கவனித்து வந்தான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த சிறுவன், ஆசிரியை கேரனின் குழந்தை தன்னுடையது. வாரத்திற்கு 2 முறை கேரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து கேரன் கைது செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார்.