டிரம்ப் உத்தரவால் கலக்கம் - அவசரமாக சிசேரியன் செய்து கொள்ளும் கர்ப்பிணிகள்
டொனால்ட் டிரம்ப்பின் புதிய உத்தரவால் கர்ப்பிணி பெண்கள் உடனடியாகி சிசேரியன் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.
டிரம்ப் புதிய விதி
அமெரிக்கா அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற முதல் நாளே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
இதில் குடியுரிமை தொடர்பான உத்தரவு ஒன்று அங்கு வசித்து வரும் அமெரிக்கா குடியுரிமை இல்லாத மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்க குடியுரிமை
முன்னதாக அமெரிக்கா குடியுரிமை சட்டப்படி, அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குடியுரிமை விதியில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் திருத்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
புதிய விதிப்படி, குழந்தையின் பெற்றோர் இருவரில் ஒருவராவது, அமெரிக்கராகவோ, கிரீன் கார்டு வைத்திருப்பவராகவோ அல்லது அல்லது அதிகாரபூர்வ நிரந்தர இருப்பிட சான்று வைத்திருப்பவராகவோ இருக்க வேண்டும். இவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.
கர்ப்பிணி பெண்கள்
இந்த புதிய விதிமுறை மூலம் தானியங்கி குடியுரிமை மூலம் தங்கள் குழந்தைகளுக்கு கிரீன் கார்டு பெற்று வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதி 1 மாதத்தில் அமலாக உள்ள நிலையில், தற்போது கர்ப்பிணியாக உள்ள பெண்கள் ஒரு மாதத்திற்குள்ளாகவே சிசேரியன் மூலம் குழந்தை பெற மருத்துவமனைகளை நாடியுள்ளனர்.
ஏற்கனவே விசா மூலம் அமெரிக்கா சென்ற இந்தியர்கள் அங்கு கிரீன் கார்டு பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது டிரம்பின் புதிய விதியால் அவர்களின் குழந்தைகளும் கிரீன் கார்டு பெற காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.