அழுத்தம் கொடுத்த சீனா..WHO-ல் இருந்து வெளியேறிய அமெரிக்கா - அதிபர் டிரம்ப் கூறியது என்ன?
உலக சுகாதார மையத்திலிருந்து மீண்டும் அமெரிக்கா வெளியேறி உள்ளது .
அமெரிக்கா
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். டிரம்ப் பதவியேற்றதை அடுத்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மட்டும்தான் இனி அமெரிக்காவில் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறி பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா நிதி அளித்துள்ளது.ஆனால் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களை உலக சுகாதார நிறுவனம் சரியான முறையில் கையாளவில்லை.
WHO
சீனாவில் தவறான செயலின் விளைவாக உலகம் இப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகத்தைத் தவறாக வழிநடத்த உலக சுகாதார நிறுவனத்திற்குச் சீனா அழுத்தம் கொடுப்பதாக டிரம்ப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
இதன்காரணமாக தற்போது உலக சுகாதார மையத்திலிருந்தும் அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.மேலும் உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவைத் துண்டித்துவிட்டு அந்த நிதியை மற்ற உலகளாவிய பொதுச் சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.