இனி ஆண், பெண் மட்டும்தான்; அவர்களுக்கு இடமில்லை - ட்ரம்ப் உரையில் பகீர்!
ட்ரம்ப் நாட்டின் 47-வது அதிபராகியியுள்ளார்.
இரு பாலினங்கள்
அமெரிக்காவின் 47-வது அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய ட்ரம்ப்,
இன்றைய நிலவரப்படி, ஆண், பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும்.
மீண்டும் பணி
கோவிட் தடுப்பூசி உத்தரவை ஏற்க மறுத்ததால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட அனைவரையும் இந்த வாரம் முழு ஊதியத்துடன் மீண்டும் பணியில் அமர்த்துவேன். எங்களின் ராணுவ வீரர்கள் தங்களின் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது,
BREAKING: Donald J. Trump is sworn in as the 47th President of the United States. pic.twitter.com/zFFfNGHwXh
— Fox News (@FoxNews) January 20, 2025
தீவிர அரசியல் கோட்பாடுகள் மற்றும் சமூக சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்க நான் ஒரு உத்தரவில் கையெழுத்திடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இவரின் இத்தகைய பேச்சு மூன்றாம் பாலினத்தார்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.