இறந்தவங்க மீண்டும் உயிரோடு வரமுடியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
இறந்தவரை மீண்டும் உயிரோடு மீட்டு வர நிறுவனம் ஒன்று முயற்சித்து வருகிறது.
கிரையோஜெனிக்ஸ்
ஜெர்மன் கிரையோனிக்ஸ் (cryonics) ஸ்டார்ட்-அப் நிறுவனம், இறந்தவரை மீண்டும் உயிர்த்தெழ வைக்கிறது. இதனை கிரையோஜெனிக்ஸ் தொழில்நுட்பம் என்று கூறுகின்றனர். இதற்கு 1.73 கோடி செலவாகும் என்கின்றனர்.
இதன்மூலம் ஒருவர் இறந்த இரண்டு நிமிடங்களுக்குள் ரத்தம் அனைத்தும் வெளியேற்றப்பட்டு அதற்கு பதிலாக ஒரு கெமிக்கலை உடம்பில் செலுத்துவார்கள். தொடர்ந்து செல்கள் சேதமடையாமல் இருக்க ஊசி மூலம் ஒரு மருந்து செலுத்தப்படும்.
தொடர் முயற்சி
பின் சடலம் மைனஸ் 130 டிகிரி குளிரில் வைக்கப்படும். பிறகு, நைட்ரஜன் அடைக்கப்பட்ட கன்டெய்னரில் சடலம் மைனஸ் 196 டிகிரி செல்சியசில் வைக்கப்படும். இது இன்னும் 100 ஆண்டுகளுக்குள் சாத்தியமானது என்கின்றனர்.
இதனை டுமாரோ பயோ என்ற நிறுவனம் இந்த டெக்னாலஜியை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக, 1999ல் நார்வே நாட்டுக்கு, விடுமுறையைக் கழிக்கச் சென்ற ஒரு நபர், பனிச்சறுக்கு விளையாட்டின் போது,
எதிர்பாராத ஒரு சம்பவத்தால் இரண்டு மணிநேரம் மருத்துவ ரீதியாக இறந்த நிலையில் இருந்தார். ஆனால் மீண்டும் உயிர் பெற்றார். இதனை காரணமாக வைத்துதான் இந்த நிறுவனம் கடுமையாக முயற்சித்து வருகிறது.