பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்; தலைமுடியை வெட்டிய ஆசிரியர் - பகீர் சம்பவம்!
பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கொடுமை
ஆந்திரா, சீதாராமராஜு மாவட்டத்தில், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 18 மாணவிகள் பள்ளிக்கு காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் சாய் பிரசன்னா, 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டியுள்ளார்.
பெற்றோர்கள் புகார்
மேலும், 4 மாணவர்களை தாக்கி, அவர்களை வெயிலில் நிற்க வைத்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து யாரிடம் கூற வேண்டாம் என்று மாணவிகளை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவிகள் இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாஎ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மாணவிகள் முடியை வெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு IBC Tamil