ஸ்டைலாக முடி வெட்டிய மாணவன்.. மொட்டை அடித்த பேராசிரியர் - அடுத்து நடந்த சம்பவம்!
முடியை ஸ்டைலாக வெட்டிய மாணவனுக்கு கல்லூரி பேராசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவன்
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அதில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் சீனாவில் உள்ள இளைஞர்கள் போலவே ஸ்டைலாக தலைமுடியை வெட்டி கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளார்.

அதை பார்த்த கல்லூரி விடுதியில் உள்ள மூத்த மாணவர்கள் அவரை போலவே முடி வெட்டி கொண்டு கல்லூரிக்கு வர கூடாது என்றும், அது மருத்துவ மாணவருக்கு அழகில்லை எனவும், தலைமுடியை சீராக வாரும்படி முடி வெட்டி வரவும் எனவும் கண்டிப்பாக கூறியுள்ளனர்.
கல்லூரி
இதனால், அவர் முடியை வெட்டி குறைத்திருக்கிறார். இந்த நிலையில், ந்த விடுதியின் ராகிங் ஒழிப்பு கமிட்டியின் அதிகாரியான உதவி பேராசிரியர் ஒருவர் ஸ்டைலாக முடி வெட்டி இருந்த மாணவனை கடைக்கு அழைத்து சென்று, மொட்டையடிக்க செய்துள்ளார்.

இந்த விவகாரம் தெரிந்ததும் கடும் கண்டனங்கள் எழுந்தது. விடுதி பணியில் இருந்து அந்த உதவி பேராசிரியரை விடுவிக்கும்படி கல்லூரியின் அதிகாரிகளுக்கு நெருக்கடி அதிகரித்தது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது,
புதிய குற்றவியல் சட்டம், ராகிங் ஒழிப்பு, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தனர்.மேலும், தெலுங்கானா சுகாதார அமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு இதற்கு பொறுப்பானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil