நாடாளுமன்றத்தில் தலைமுடியை வெட்டிய பெண் எம்பி - உறுப்பினர்கள் அதிர்ச்சி!
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஸ்வீடன் பெண் எம்பி தலைமுடியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஜாப் விவகாரம்
ஈரானில் அண்மையில் மாணவி ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தில் போது 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
எம்பி ஆதரவு
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஈரான் பெண்களுக்கு ஆதரவாகவும் ஹிஜாபுக்கு எதிராகவும் ஸ்வீடன் பெண் உறுப்பினர் தன் தலைமுடியை வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய உறுப்பினர் சலானி,
ஈரான் பெண்களுக்கு விடுதலை வேண்டும் என்று முழங்கியபடி தனது தலைமுடியை வெட்டி எதிர்ப்பு தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் அனைவரும் ஈரானில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோருகிறோம் என்றார். இதனை பார்த்த அங்கிருந்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.