மேடையிலேயே முடியை வெட்டிய பாடகி - ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு!
பாடகி ஒருவர் தனது தலைமுடியை வெட்டி ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் போராட்டம்
ஈரானில் முறையாக ஹிஜாப் அணியாததால் நெறிமுறை பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட இளம் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரானிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், தீ வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாடகி ஆதரவு
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு துருக்கி பாடகி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Turkish musician Melek Mosso who had previously been targeted Turkey's government and got her concerts restricted multiple times, cut her hair on stage in solidarity with #IranProtests for #MahsaAmini. pic.twitter.com/HJjvEhX6IK
— dokuz8NEWS (@dokuz8news) September 26, 2022
துருக்கி நாட்டின் பிரபல பாடகி மிலிக் மோசோ. இவர் நேற்று அந்நாட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பாடலை பாடிமுடிந்த பின்னர் நிகழ்ச்சி மேடையில் மிலிக் மோசா தனது தலைமுடியை வெட்டி ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.