ஹிஜாப் விவகாரம் : மாணவி முஸ்கானுக்கு பெருகும் ஆதரவு

Student Karnataka HijabRow Allahuakbar Hijabissue
By Thahir Feb 09, 2022 02:54 AM GMT
Report

கர்நாடகவில் கல்லுாரிக்கு வந்த இஸ்லாமிய மாணவி ஒருவரை காவி துண்டு அணிந்து வந்த மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ப்ரி யூனிவர்சிட்டியில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிக்கு எதிராக மாணவர்கள் காவி நிறத்துண்டை அணிந்து கொண்டு ஜெய்ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பிய சம்பவத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் மட்டுமே இந்த காட்டுமிராண்டி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

தனியொரு பெண்ணை துரத்திக்கொண்டு வரும் கூட்டத்தை பார்க்கும் போது நெஞ்சம் பதைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மலாலா யூசுப்சாய் தனது ட்விட்டர் பக்கத்தில் முஸ்லீம் மாணவி ஒருவர் படிப்பு மற்றும் ஹிஜாப் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறினார்.

இதனால், இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்கள் ஓரங்கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்ஸ்ரீராம் ஆண் கும்பலின் ஆணவக் குரல்,அல்லாஹு அக்பர் இளம் பெண்ணின் ஒற்றைப் போர்க்குரல் என குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது.

கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது என தெரிவித்துள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஹிஜாபுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு தன்னுடைய கண்டனம் தெரிவித்துள்ளார். எனக்கே பல முறை ஹிஜாப் அணிய தோன்றியதாக கூறிய அவர் ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சம்வம் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது முகநுால் பக்கத்தில் மாணவி முஸ்கான் மற்றும் ஹிஜாபுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.