ஹிஜாபுக்கு தடை விதித்த கல்லூரி நிர்வாகம் - ஆசிரியை எடுத்த அதிரடி முடிவு!
ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என சட்டக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக ஆசிரியை ஒருவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஹிஜாபுக்கு தடை
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எல்ஜேடி சட்டக் கல்லூரியில் சஞ்சிதா காதர் என்ற ஆசிரியை 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இதனிடையே மே மாதம் 31-ம் தேதிக்கு பிறகு கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் அவரிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த உத்தரவு தனது மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, சஞ்சிதா காதர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கல்லூரி நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.
மின்னஞ்சல்
மேலும், பணியிடத்தில் துணியால் தலையை மூடுவதற்கு தடை ஏதும் இல்லை எனவும் சஞ்சிதாவுக்கு கல்லூரி நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இதனை அவரும் உறுதி செய்துள்ளார்.
அந்த மின்னஞ்சலில் "ஆசிரியர்களின் டிரஸ் கோட் குறித்து சீரான இடைவெளியில் ரிவ்யூ செய்வோம். இருந்தாலும் வகுப்பு எடுக்கும் போது தலையில் துப்பட்டா அல்லது வேறேதேனும் துணியை அணிந்து கொள்ள தடை ஏதும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.